15 ஆம் திகதிக்கு பின்னர் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை..!!!


எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கதிர்காமத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரத்துறையினரின் பரிந்துரைகளுக்கு அமைய, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் அந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here