பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முதற்கட்டமாக 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பைஸர் தடுப்பூசியை ஒரு தடவை மட்டும் செலுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
முதலில் 19 வயதுடைய மாணவர்களுக்கும் அதன் பின்னர் 18 என்ற அடிப்படையில் 17, 16, 15 என கட்டம் கட்டமாக தடுப்பூசிகள் செலுத்தப்படும். மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள் ஊடாக தடுப்பூசிகள் செலுத்தப்படும்.
குறித்த வயதுகளையுடைய பாடசாலைகளிலிருந்து இடை விலகியவர்கள் தமது பகுதி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் ஊடாக தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.