யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 34 ஆவது நினைவு தினம்..!!!


1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த 21 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்ததன் 34 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இன்று காலை இடம்பெற்றது.

இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக உயிரிழந்தோரின் உறவுகளால் சுடர் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

சுகாதார நடைமுறைகளை பேணி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர், வைத்தியசாலை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post


Put your ad code here