'மக்கள் குழப்பமடைய வேண்டாம்' - எரிசக்தி அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!!




நாட்டினுள் எவ்வித எரிபொருள் பற்றாக்குறையும் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இன்று சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை குறித்து விளக்கம் அளித்து அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

ஒரே விடயத்தை 108 தடவை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்று பழைய நம்பிக்கை ஒன்று உள்ளது. அதனால் என்னவோ கடந்த 4 மாதங்களால் இடைக்கிடையில் பெற்றோலிய தொழிற்சங்கள் அதேபோல் எதிர்க்கட்சியின் அரசியல்வாதிகள் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். கடந்த 4 மாதங்களாக அவர்கள் கூறிய எரிபொருள் பற்றாக்குறை ஏற்படவில்லை. நான் உறுதியளித்தேன் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவதற்கு முன்னரே நான் அறிவிப்பேன் என்று. அதன்படி, செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி நாட்டில் கச்சா எண்ணெய் பற்றாக்குறையொன்று ஏற்பட வாய்ப்புள்ளது என நான் தெரிவித்தேன். அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நான் கூறியிருந்தேன். மீண்டும் அதேதான் கூறுகிறேன். நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் பற்றாக்குறையும் இல்லை. வீணாக குழப்பமடைய வேண்டாம்.
Previous Post Next Post


Put your ad code here