6 வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட மகளுக்கும், பேரனுக்கும் அஞ்சலி செலுத்திய உறவுகள்..!!!




வவுனியாவில் 6 ஆண்டுகளுக்கு முனனர் படுகொலை செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது மகனுக்குஉறவினர்களால் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 2015.08.09 ஆம் திகதியன்று யாழில் உள்ள தனது தாயார் வீட்டிலிருந்து வவுனியாவில் உள்ள கணவரது வீட்டிற்கு சென்ற சயிந்திகா எனும் பெண்ணும் அவரது மகனான பொபிஷணனும் அன்றைய தினமே படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த பொலிஸார் 6 வருடங்கள் கழித்து குறித்த பெண்ணின் கணவனை கடந்த ஒகஸ்ட் 7 ஆம் திகதி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிண் கணவனிடம் வவுனியா பொலிஸார் மேற்கொண்டவிசாரணையின்போது, தனது மனைவியையும் தனது மகனையும் தானே கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் மகனின் ஆத்மா சாந்தியடைய சயிந்திகாவின்பெற்றோரும் உறவினர்களும் பால்வார்த்து கண்ணீர் அஞ்சலி செல்லுத்தியுள்ளனர்.

வவுனியாவிலுள்ள முருகனூர் பகுதியிலேயே இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
Previous Post Next Post


Put your ad code here