வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம்..!!!



யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் நேற்று (06) மாலை வாகனமொன்று வீட்டின் மதில் மீது மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.

இந்த சம்பவத்தில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த குறித்த வாகனமே வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் விபத்திற்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது.

விபத்தில் வாகன சாரதி காயமடைந்துள்ளதுடன், வாகனமும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் வீட்டின் மதில் உடைந்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஈரப்பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here