Wednesday 20 October 2021

ஓமான் நாட்டுடன் 20 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள இலங்கை..!!!

SHARE

நாட்டுக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய இலங்கை - ஓமான் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

இந்த ஒப்பந்ததில் 3.6 பில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான ஒப்பந்தமே இவ்வாறு கையெழுத்திடவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கடனை 5 வருட சலுகையோடு 20 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

தற்போதைய சூழலில் டீசல் ஒரு லீற்றர் 35 ரூபாவும், பெற்றோல் 18 ரூபா நட்டத்தையும் எதிர்கொண்டு வருவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எரிபொருள் தேவைக்காக மாதமொன்றுக்கு 350 மில்லியன் டொலர் செலவிடப்படுவதாகவும். தற்போது கொள்வனவு செய்யவுள்ள எரிபொருளானது ஒரு வருடத்திற்கு போதுமானதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.          
SHARE