டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான முதற்சுற்று மற்றும் பயிற்சி ஆட்டங்கள் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று அபுதாபியில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கை நியூசிலாந்து அணி தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் 73 ரன்கள் விளாச நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் சௌதி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 164 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் இங்கிலாந்துடன் வெற்றிக்காக மல்லுகட்டியது. அந்த அணியில் அதிகப்பட்சமாக மார்டின் குப்தில் 41 ரன்கள் விளாச மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறினர்.
இதனால் 19.2 ஓவர்களில் நியூசிலாந்து அணி 150 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இங்கிலாந்து அணி சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
Tags:
Sports News