பால்மா உள்ளிட்ட பொருட்களுக்கான நிர்ணய விலை நீக்கம்: அரசு அறிவிப்பு..!!!


கோதுமைமா, பால்மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கான நிர்ணய விலையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று (07) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நிர்ணய விலை நீக்கப்பட்டுள்ளதன் காரணமாக அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here