பால்மா தொடர்பில் வெளியிடப்பட்ட மற்றுமொரு புதிய செய்தி..!!!


வார இறுதியில் தட்டுப்பாடின்றி நுகர்வோர் பால்மாவினை சந்தைகளில் பெற்றுக்கொள்ள முடியுமென பால்மா வர்த்தகர்கள் சங்கத்தின் முக்கியஸ்தரான லக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

மேலும் 8000 தொன் பால் மாவுக்கான தட்டுப்பாடு தற்போது சந்தையில் நிலவுவதாகவும் மட்டுப்படுத்தப்பட்ட தினங்களில் ஒரே தடவையில் பெருமளவு பால்மாவை சந்தைக்கு விநியோகிக்க முடியாதுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மேலும் 8 கொள்கலன் பால்மா விடுவிக்கப்படுவதற்காக துறைமுகத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here