கொடுவா மீன் வளர்ப்பு சுயதொழில் முயற்சி..!!!





யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட இடங்களில் தனியார் முதலீட்டுடன் பயனாளிகளுக்கு கொடுவா மீன் வளர்ப்பு சுயதொழில் முயற்சியை ஏற்படுத்திக் கொப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (7) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு குறிப்பிட்டார்.

முதற்கட்டமாக 100 பயனாளிகளுக்கு கொடுவா மீன் வளர்ப்பு தொழில் முயற்சியை மேற்கொள்ள தலா 250 000 ரூபாய் முதலீட்டு உதவி வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பயனாளிகளுக்கு தேவையான மீன் வளர்ப்புக்கான பயிற்சியை வழங்குதல், விற்பனை செய்யும் சந்தை வாய்ப்பை பெற்றுக்கொடுப்பது போன்ற விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here