Friday 22 October 2021

நெதர்லாந்து அணியை இலகுவாக வீழ்த்திய இலங்கை..!!!

SHARE

இருபதுக்கு 20 உலகக்கிண்ண தகுதிச்சுற்றுப் போட்டியில் இன்று இடம்பெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 8 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 10 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 44 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து, இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்த வெற்றியின் ஊடாக ஐசிசி இருபதுக்கு 20 தொடரில் இலங்கை அணி முதலாவது குழாமுக்குள் நுழைந்துள்ளதோடு, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளோடு இலங்கை அணி விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE