மிக்கி ஆதரின் புதிய பதவி

 


இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆதர் எதிர்வரும் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டித் தொடருடன் தனது பதவியில் இருந்து விலகவுள்ளார்.


அவருடைய ஒப்பந்த காலம் நிறைவடைந்ததை அடுத்து அவர் இவ்வாறு பதவியில் இருந்து விலகவுள்ளார்.

அவர் தொடர்ந்து இலங்கை அணிக்கு பயிற்றுவிக்க விரும்பம் தெரிவித்துள்ள போதிலும் அதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எவ்வித பதிலும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அவர் தற்போது இங்கிலாந்தின் டர்பஷயர் மாநிலத்தின் கிரிக்கெட் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here