நவம்பர் 25ஆம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்துள்ள மாநாடு படம் திரைக்கு வந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் இரண்டு நாளில் ரூ.14 கோடி வசூலித்ததாக தயாரிப்பாளர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தும் மாநாடு படத்தைப்பார்த்து விட்டு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இயக்குநர் வெங்கட்பிரபு, சிலம்பரசன்,எஸ்.ஜே.சூர்யா ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்தியிருக்கிறார் ரஜினிகாந்த்.
இதுகுறித்த தகவலைத் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள எஸ்.ஜே. சூர்யா, இன்று எனது நடிப்புத்திறமைக்கு மிகப்பெரிய விருது கிடைத்ததாக உணர்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினி சார் எனக்கு போன் செய்து வாழ்த்தினார். உங்களின் அன்பான வாழ்த்து எனது சினிமா பயணத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது என்று பதிவிட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
இந்த படத்தில் சிம்புவுக்கு வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
cinema news