2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.இந்நிலையில், குறித்த வரவு செலவுத் திட்ட பிரேரணை தொடர்பில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் உள்ள மக்கள் இன்று தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள் பின்வருமாறு:
"என்ன சொல்வது வரவு செலவு திட்டம் ஒன்று தேவையில்லையே... பொருட்களின் விலை தானாகவே அதிகரிக்கின்றது தானே... பின்னர் எதுக்கு வரவு செலவு திட்டம்...
"ஐயோ, பேச வேண்டாம். வரவு செலவு திட்டம் பயனில்லை. ஒன்றும் பயனில்லை. நாடு முழுவதும் முடிந்துவிட்டது. நாட்டை திண்ணு விட்டார்கள்."
" மிகவும் சுகமாக உள்ளது..."
"அவை நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டுக்கு மிகவும் நல்லது."
"பாராளுமன்றத்தில் இருப்பவர்களுக்கு சிறந்தது."
" வரவு செலவு திட்டம் என்றால்... மிகவும் சிறந்தது.. எந்த தவறுகளும் இல்லை... இன்று நகரத்தையும் அழகுப்படுத்தி உள்ளார்கள் தானே... எமக்கு அது போதும்..."
" எமக்கு மரக்கறிகளுக்கு சிறந்த முறையில் உரம் வழங்கியுள்ளனர்..."
" எந்த நிவாரணமும் இல்லையே"
" நான் நினைக்கிறேன்... உரம் எமக்கு கிடைக்கும்... பொருட்களின் விலைகளும் குறையும்... நாம் வாக்களித்தது இவற்றை எதிர்ப்பார்த்து இல்லையே..."
ஓய்வூதியம் குறித்து இருந்தது... ஆசிரியர்களுக்கு நிவாரணம் இருந்த்து.. நல்லது என நம்புகிறேன்..."
" பொருட்களின் விலையைதான் எதிர்ப்பார்த்தோம்... எதுவும் குறைக்கப்படவில்லையே... அனைத்தும் அதிகரிக்கப்பட்டுள்ளதே..."
" எந்த நிவாரணமும் இல்லை... சாப்பிட ஒன்றும் இல்லை... தேங்காய் விலை அதிகரித்துள்ளது... வெங்காயம் ஒரு கிலோ 200 ரூபாவை கடந்துள்ளது...
"வரவு செலவு திட்டத்தில் மீனவர்களுக்கு எவ்வித நிவாரணமும் இல்லை... "
"எமக்கு கொடுக்க இல்லை இந்த வரவு செலவு திட்டம்... எம்மிடம் இருந்து எடுக்க...."