கொத்து ரொட்டியின் விலையை 10 ரூபாயினாலும், கிழங்கு ரொட்டி மற்றும் பராட்டா போன்ற சிற்றுண்டிகளின் விலையை 5 ரூபாயினாலும் நாளை முதல் அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு மற்றும் கோதுமை மாவின் விலை 17 ரூபாயினால் அதிகரித்தமையே இதற்கான காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கோதுமை மாவின் விலை 17 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை மாவின் விலையில் ஏற்பட்ட பெரும் விலை அதிகரிப்பு என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல தெரிவித்துள்ளார்