அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிபிரயோகத்தில் மூன்று பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டதுடன் ஆசிரியர் உட்பட எட்டுப்பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 14 வயது ஆண் மாணவர் 14 மற்றும் 17 வயதுடைய மாணவிகள் இருவரே கொல்லப்பட்டவர்கள் ஆவர்.
இந்த துப்பாக்கி சூட்டை 15 வயதுடைய மாணவர் ஒருவரே நிகழ்த்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தாக்குதலை மேற்கொண்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் எவ்வித பிரச்சினைகளும் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.அ
த்துடன் தாக்குதல் தொடர்பில் சிறுவன் எவ்வித தகவலையும் வழங்க மறுப்பதாகவும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுத்து வருவதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:
world news