யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா..!!!


யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா இன்று 19.12.2021 காலை 9.30 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் முதன்மை விருந்தினராகவும் வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் அம்மையார் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

பொம்மலாட்டம் மயில் ஆட்டம் குதிரை ஆட்டம் சகிதம் அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

நிகழ்வில் கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் கலைஞர்களுக்கு பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு கலாபூஷணம் விருது பெற்ற கலைஞர் கௌரவிப்பு 'இளங்கலைஞர் விருது' மற்றும் 'யாழ் முத்து' விருது வழங்கும் நிகழ்வும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.தர்மினி
























Previous Post Next Post


Put your ad code here