4 வயது சிறுமி கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

 


கிணற்றிலிருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது.


கிளிநொச்சி அம்பாள்நகர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி காணாமல் போன நிலையில் தேடப்பட்டுள்ளார்.

சிறுமியை உறவினர்கள் மற்றும் அயலவரின் உதவியுடன் தேடி வந்த நிலையில், வீட்டு கிணற்றினை நீர் பம்பியில் மூலம் இறைத்துள்ளனர்.

இதன்போது குறித்த சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் உடல் பிரேத பரீசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

டசிந்தன் சன்சிகா என்ற 04 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here