உள்நாட்டு எரிவாயு விநியோகம் தொடர்பாக குறிப்பிட்ட இரு நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்குமாறு நுகர்வோர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அண்மைய உத்தரவுக்கு அமைய மாத்திரம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு தமது அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
Tags:
sri lanka news