நல்லூரிலும் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது..!!!


யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

நல்லூர் கோவில் வீதியில் உள்ள ஓரு வீட்டில் மதிய உணவு தயாரித்துக்கொண்டிருந்த போது அடுப்பு எரிவதனை அவதானித்த வீட்டு உரிமையாளர் வெளியில் ஓடிச் சென்று முன்னால் இருந்த வர்த்தக நிலையத்தினரை அழைத்துள்ளார்.

இதன்போது உடனடியாக ஓடிச் சென்ற வர்த்தக நிலையத்தினர் எரிவாயு சிலிண்டரை அகற்றி தீயை அணைத்தமையினால் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படாது தடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் எரிவாயு அடுப்புகள், எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையிலேயே நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்மை குறிப்பிடத்தக்கது.



Previous Post Next Post


Put your ad code here