வவுனியா நெடுங்கேணியில் கடந்த 15 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பலியாகிய சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் காவல்துறையினரால் இன்று (17) கைதுசெய்யப்பட்டார்.
வவுனியா - நெடுங்கேணி - சேனைப்பிலவு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணை வழிமறித்த நபர் ஒருவர், அவர் மீது நாட்டுத் துப்பாக்கியால் தாக்குதல் மேற்கொண்டிருந்தார். இதனால் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில், குறித்த குற்றச்செயலை புரிந்ததாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில் இரண்டு நாட்களின் பின்னர் இன்று கைதுசெய்யப்பட்டார்.
குறித்த நபர் அந்தப் பகுதியில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் மறைந்திருந்த நிலையில் நெடுங்கேணி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.
அவரைக் கைதுசெய்ய முயற்சித்தபோது அவர் நஞ்சருந்தியுள்ளதாகவும், தற்போது அவர் காவல்துறையினரால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த நபருக்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் இருவரும் காவல்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.