கார் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து

 


கொட்டகலையில் கார் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.

சாரதி பயிற்றுவிப்பு பாடசாலை ஒன்றினால் முச்சக்கர வண்டி ஒன்றுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த போது கார் ஒன்று குறித்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு ஆண்கள் காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலவாக்கலையில் இருந்து கொட்டகலை வரை பயிற்சிக்காக பயன்படுத்திய முச்சக்கர வண்டி, கொழும்பு கடுவலையில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற கார் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.காரில் மோதுண்ட முச்சக்கர வண்டிபாதையை விட்டு விலகி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளது.

இந்த செய்தியை சேகரிக்க சென்ற எமது ஊடகவியலாளர் காரில் பயணித்த பெண் ஒருவரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் திம்புள பத்தன காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post Next Post


Put your ad code here