எரிபொருளை வழங்கினால் மின்வெட்டு இல்லை

 


இலங்கை மின்சார சபை உறுதியளித்தபடி எரிபொருளை வழங்கினால் இன்று (20) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.


எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் நேற்று (19) மின் உற்பத்தியை இடைநிறுத்த நேரிட்டதாக நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

அதன்படி நேற்று நாடளாவிய ரீதியில் சுமார் ஒரு மணி நேரமும் 45 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.

நான்கு பிரிவுகளின் கீழ் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 10,000 மெற்றிக் தொன் டீசலை வழங்குவதாக நேற்று உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here