இருவேறு கொலை சம்பவங்கள் - மூவர் பலி

 


வெலகெதர, கோனதெனிய பிரதேசத்தில் நபர் ஒருவர் பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொன்றுவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


குறித்த பெண்ணின் கள்ளக்காதலன் என சந்தேகிக்கப்படும் நபரே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொனதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் தனது மகளுடன் வசித்து வந்ததாகவும், அவரது கணவர் அவரை விட்டுச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கொலையை செய்த சந்தேக நபரும் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கைவிடப்பட்ட வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

41 வயதுடைய இவர் கோனதெனிய பிரதேசத்தை சேர்ந்தவர்.

வெலகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ககேவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி கழுத்தை நெரித்து கொன்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்தது.

24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் 23 வயதான கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (20) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்
Previous Post Next Post


Put your ad code here