ஆனந்தசங்கரிக்கு கொவிட் தொற்று உறுதி

 


தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


உடல் சுகவீனம் காரணமாக வீ.ஆனந்தசங்கரிக்கு என்டிஜன் பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டதில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிசிஆர் பிரிசோதனையும் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த பரிசோதனையிலும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகம் சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இரண்டு மெய் பாதுகாவலர்கள், சாரதி உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வீ.ஆனந்தசங்கரியின் உடல்நிலையில் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும், அவரது வயதினை கருத்தில் கொண்டு வைத்தியசாலை ஒன்றில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here