Monday 17 January 2022

லங்கா ஐஓசியிடம் கலந்துரையாடவுள்ள மின்சார சபை!

SHARE

 


எதிர்வரும் சில நாட்களுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் லங்கா ஐஓசி நிறுவனத்துடன் கலந்துரையாடவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.


"நாங்கள் பல்வேறு மாற்று வழிகளை யோசித்து வருகிறோம். அடுத்த சில நாட்களுக்கு ஐஓசியிடம் இருந்தாவது சிறிது எண்ணெயை பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்த்துள்ளோம். "

"மின்சார சபையின் தலைவரிடமும் கூறியுள்ளோம். அவரும் வருவதாக கூறியுள்ளார்."

ஊடகவியலாளர்- "அப்படியாயின் 3 நாட்களுக்கு மின்வெட்டு இருக்காது என்று உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா?"

அமைச்சர் காமினி லொக்குகே - "22 வரை செயற்பட எப்படியாவது எண்ணையை பெற்றுக் கொள்ள வேண்டும்."

ஊடகவியலாளர்- "எரிபொருள் வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தீர்களா?"

அமைச்சர் காமினி லொக்குகே – “இல்லை, கோருவதற்கு ஒன்றுமில்லை. இது வருடாந்தம் வழங்கப்பட வேண்டும். அப்படி இன்றி தினம் தினம் கேட்க முடியாது. ஆண்டுக்கான திட்டத்தின் போது அவர்கள் இலங்கை மின்சார சபைக்கு இவ்வளவு தேவை என்று ஒதுக்க வேண்டும். மின் உற்பத்தி நிலையங்களுக்கு இவ்வளவு தேவை என்று. எனவே அதற்கேற்ப கொண்டு வருவார்கள் என நம்புகிறோம்" என்றார்.

இலங்கை மின்சார சபைக்கு நாளை (18) வரை நாளாந்தம் 1500 மெற்றிக் தொன் டீசலை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக அந்த சபை தெரிவித்திருந்தது.

அவ்வாறு கூறப்பட்ட போதிலும் இன்று காலையும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
SHARE