இரு இராஜாங்க அமைச்சர்கள் உட்பட மூவருக்கு கொரோனா


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.


இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள ஆகியோருக்கு இவ்வாறு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அமரகீர்த்தி அத்துகோரளவின் மனைவிக்கும் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு நேற்று (24) கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

கடந்த சில நாட்களாக, பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஒரு வாரத்தில் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here