Sunday 13 February 2022

ஸ்மார்ட்போன் உலகை மாற்றப்போகும் கூகுள்..!!!

SHARE


சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் 2016 முதல் தனது வெற்றிகரமான எண்ட்ராய்ட் தளத்திற்கு மாறாக ஒரு ஓப்பன் சோர்ஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கி வருகிறது.

இதற்குப் பெயர் Fuchsia OS, இந்தத் தளத்தை இதுவரை யாரும் முழுமையாகப் பயன்படுத்தத் ஆரம்பிக்காத நிலையில் சம்சங் முதல் ஆளாக முன்வந்து தனது ஸ்மார்ட்போன் தயாரிப்பிற்கு Fuchsia OS-ஐ பயன்படுத்தத் திட்டமிட்டு வருவதாகவும், அதற்கான ஆலோசனையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2021 மே மாதம் அனைத்து முன்னணி எலக்ட்ரானிக்ஸ் (Electronics companies) நிறுவனமும் விரைவில் Fuchsia OS-ஐ பயன்படுத்த முன்வரும் எனத் தகவல் வெளியானதில் இருந்து Fuchsia OS இணையதளத்தில் பெரிய அளவில் பிரபலமாகியுள்ளது.

இந்நிலையில் சம்சங் தனது ஸ்மார்ட்போனில் எண்ட்ராய்ட்க்கு பதிலாக Fuchsia OS பயன்படுத்த முன்வந்துள்ளது. கூகுள் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சந்தைக்கும் முக்கியமான விஷயமாக உள்ளது. அப்படி இந்த Fuchsia OS என்ன ஸ்பெஷல்.

கூகுள் நிறுவனத்தின் நீண்ட காலக் கனவு தான் இந்த Fuchsia OS. அதாவது அனைத்து கருவிகளுக்கும் ஏரே ஓஎஸ் உதாரணமாக ஸ்மார்ட்போன் முதல் ஸ்மார்ட்வாட்ச், கம்ப்யூட்டர், டேப்லெட், embedded systems வரையில் அனைத்திற்கு ஒரே ஓஎஸ்.

இந்த எண்ணம் கூகுள்-க்கு வர காரணம், எண்ட்ராய்ட் தளத்தில் இருக்கும் பழைய போன்களுக்குப் புதிய அப்டேட் மற்றும் பாதுகாப்புகளை அளிக்க முடியாமல் உள்ளது. இதைச் சரி செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் உருவானது தான் Fuchsia OS. அதனாலேயே இதை ஓப்பன் சோர்ஸ் தளத்தில் புதிய Zircon கெர்னல் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சாம்சங் தனது Tizen OS உடன் கூகுள் நிறுவனத்தின் Wear OS உடன் இணைத்து ஒற்றைத் தளமாக மாற்றி அமைத்தது. இதைத் தொடர்ந்து Fuchsia OS-ஐ முதல் ஆளாகப் பயன்படுத்த சாம்சங் முன்வந்துள்ளது. எப்படி வியர் ஓஎஸ் தளத்தில் சாம்சங் உதவி செய்ததோ தற்போது Fuchsia OS உதவி செய்து சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த கூகுள் காத்துக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

SHARE