Friday 11 March 2022

நாளைய மின்வெட்டு விவரம் வெளியீடு..!!!

SHARE

நாளைய தினம்(12) மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு நாளை(12) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டு மணித்தியாலங்களுக்கும், மாலை 5 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் பிற்பகல் 4:30 மணி முதல் இரவு 9:30 மணி வரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

  A முதல் W வரையான வலயங்களுக்கான மின்துண்டிப்பை அறிந்துகொள்ள இங்கே அழுத்தவும்
SHARE