கோதுமை மா இறக்குமதி செய்யும் இரு நிறுவனங்களும் கோதுமை மாவின் விலையை இன்று முதல் அதிகரித்துள்ளன.
அதற்கமைய செரண்டிப் நிறுவனம் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 35 ரூபாவினால் அதிகரித்துள்ளது. 121 ரூபாவாக காணப்பட்ட செரண்டிப் நிறுவனத்தின் ஒருகிலோகிராம் கோதுமை மாவின் புதிய விலை 156 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒருகிலோகிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிக்க பிறிமா நிறுவனம் அறிவித்துள்ளதாக விற்பனை முகவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது கோதுமை மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாண் உள்ளிட்ட வெதுப்பக (பேக்கரி) உணவு பொருட்களின் விலையை அதிகரிக்குமாறு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.