
காலி முகத்திடலுக்கு வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச மீது இன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலில் அவரது வாகனமும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலிமுகத்திடலில் இன்று இடம்பெற்ற கலவரத்தைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினர் அவசரமாக சென்றிருந்தனர்.
இதன்போது, சஜித் உள்ளிட்டடோரை அங்கிருந்த ஒரு குழு தாக்கி விரட்டியடித்தது. கற்களாலும் தடிகளாலும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்ட களத்துக்கு எதிர்க்கட்சித்தலைவருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, எரான் விக்ரமரத்ன, முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் சென்றிருந்தனர்.
பாதுகாப்பு படையினர் அவர்களை பாதுகாப்பாக மீட்டு வாகனங்களில் திருப்பி அனுப்பினர்.
Tags:
sri lanka news