காலிமுகத் திடல் மற்றும் அலரி மாளிகையின் முன்பாக அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மஹிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறை மக்களை கொதிநிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
கொழும்பில் வீதிக்கு இறங்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் அரசாங்கத் தரப்பினரைத் தேடித் தேடித் தாக்கத் தொடங்கியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த வாகனங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் வீடு மற்றும் அலுவலகத்துக்கு மக்கள் தீ வைத்துள்ளனர். இவர் தீவிர ராஜபக்ச விசுவாசியாவார். அதேநேரம் மொரட்டுவ முன்னாள் மேயர், இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா, முன்னாள் அமைச்சர் ரொமேஸ் பத்திரன, நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிசாந்த, அருந்திக பெர்ணான்டோ ஆகியோரின் வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்கள் தங்களது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ள பதிவொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
Former minister Sanath Nishantha's place is on fire pic.twitter.com/jB3uaka7sW
— Sasith Bandara (@sasith_bandara) May 9, 2022