நாடளாவிய ரீதியில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ் பிரதிகளை வழங்கும் நடவடிக்கை ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தரவு கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கோளாறினை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மறுசீரமைப்புக்குப் பிறகு இது தொடர்பான அறிவிப்பு பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news