யாழ். போதனாவில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் இளைஞன் கைது..!!!


யாழ்.போதனா வைத்தியசாலையில் கையடக்க தொலைபேசிகளை திருடி வந்தவர் எனும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டதாகவும், சந்தேக நபரிடமிருந்து பெறுமதிவாய்ந்த 9 கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டன என பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நீண்ட நாட்களாக ஊழியர்கள், நோயாளிகளின் கையடக்க தொலைபேசிகள் திருடப்பட்டு வந்துள்ளன.

கதைத்துவிட்டுத் தருவதாக தெரிவித்துவிட்டு அபகரித்துச் செல்வது, சார்ஜ் போடும் போது, நோயாளிகள் மலசல கூடங்களுக்கு செல்லும் சந்தர்ப்பங்கள் என்பவற்றை பயன்படுத்தி கையடக்க தொலைபேசிகள் திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றன.

அவை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன், அவரிடம் இருந்து கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.


Previous Post Next Post


Put your ad code here