கமலுடன் நடிப்பது என் கனவு - சூர்யா..!!!


'விக்ரம்' படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தது பற்றி நடிகர் சூர்யா ட்வீட் செய்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கக்கூடிய 'விக்ரம்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி கடந்துள்ளது. உலகளவில் முதல் நாள் வசூல் 40 கோடியை கடந்துள்ளது . விரைவில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் 'விக்ரம்3' திரைப்படத்திற்கான கதையின் தொடக்கமாக நடிகர் சூர்யாவின் கதாபாத்திரமான 'ரோலக்ஸ்' கதையும் இடம்பெற்றிருக்கும்.

நடிகர் சூர்யாவிற்கு இந்த படத்தில் நடிக்க கடைசி நேரத்தில்தான் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இரண்டு நாட்கள் கால்ஷீட்டில் படத்தில் அவருக்கான 4 நிமிட காட்சி படமாக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தது பற்றி சூர்யா ட்வீட் செய்துள்ளார். அதில், ' அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா! நான் எப்படி சொல்வேன்? உங்களுடன் சேர்ந்து நடிப்பதும் உங்களுடன் திரையை பகிர்ந்து கொள்வதும் என்பது என்னுடைய கனவு. அது நனவானது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம். இதை உருவாக்கி கொடுத்ததற்கு நன்றி.

படத்தின் வெற்றிக்காக அத்தனை நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் லோகேஷ் கனகராஜ் பெறும்பொழுது பார்க்கவே நிறைவாக உள்ளது" என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here