குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் நிவாரணம்..!!!



நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் 200 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று மாலை கூடிய வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 7,500 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

பொருளாதார நெருக்கடியால் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதாந்த உணவு நிவாரணம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கு உணவுப் பொருட்களை வழங்குவதே மிகப் பெரிய சவாலாகும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.


Previous Post Next Post


Put your ad code here