மதுபோதையில் இருந்த சிலரின் தாக்குதல் காரணமாக ஓடும் ரயிலில் இருந்து கீழே வீழ்ந்த ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் மதுபோதையில் இருந்த சிலரால் குறித்த பாதுகாப்பு அதிகாரி தாக்கப்பட்டுள்ளார்.
வெயாங்கொட – வதுரவயில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிய போது அவர் ரயிலில் இருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
ஒருதொட்டையை சேர்ந்த 52 வயதான பாதுகாப்பு உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் மற்றும் நொச்சியாகமையை சேர்ந்த இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags:
sri lanka news