
கொழும்பு கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (30) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
கொட்டாஞ்சேனை விவேகானந்தா வீதி பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடலோர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news