CCTV யில் சிக்கிய திருடன்

 


தங்க நகை திருடனால் மாலபே கஹந்தோட்டை பிரதேச மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த சந்தேக நபர் பல தடவைகள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பல்வேறு பொருட்களை திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அதிகம் அடிமையாகியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் பியகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் மாலபே கஹந்தோட்டை பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் இருந்த பெண் ஒருவரிடமும், வீதியில் நடந்து சென்ற பெண் ஒருவரின் தங்க நகைகளையும் சந்தேக நபர் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்
Previous Post Next Post


Put your ad code here