கடந்த 20 மாதங்களில் 10 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதிக் கட்டுப்பாட்டாளருமான பியூமி பண்டார தெரிவித்தார்.
கடந்த வருடம் (2021) ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வரையிலான 20 மாத காலப் பகுதியில் ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 992 பேர் புதிதாக கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளதாகவும், அக்காலப்பகுதியில் 10 இலட்சத்து 50 ஆயிரத்து 24 பேர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
44 இலட்சத்து 97 ஆயிரத்து 122 இலங்கையர்கள் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Tags:
sri lanka news