
"பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்கிவிட்டு நாட்டைத் துண்டாட நினைக்கும், பயங்கரவாதிகளுக்குத் தீனிபோட முடியாது" என அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவுமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“சிறைச்சாலைகளிலுள்ள பயங்கரவாதிகளை விடுவிக்க முடியாது. எனவே, பயங்கரவாதிகளையும் வன்முறையாளர்களையும் அடக்க பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையில் இருக்க வேண்டும்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வடக்கிலிருந்து ஆரம்பமாகியுள்ள கையெழுத்து போராட்டத்துக்கு எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து கொள்கின்றோம்.
ஜெனிவா மாநாடு ஆரம்பமாகியுள்ள நிலையில் நாடு முழுவதிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ள கருத்து சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு எதிரான ஜெனிவா நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் தான் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது
Tags:
sri lanka news