
அரசியல் கைதிகளை பார்வையிட வந்த உறவுகளை சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தியதையும் உளரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியதையும் வன்மையாக கண்டிக்கின்றேன் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று(14.02.2022) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“சிறைச்சாலைகள் தினத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பார்வையிட வந்த உறவுகளை சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களுக்கு எதிராக இனவாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டு உளரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
Tags:
sri lanka news