முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்தையன் கட்டுப்பகுதியில் வயல் உழவிற்காக உழவு இயந்திரத்தினை செலுத்திக்கொண்டிருந்த போது உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முத்தையன் கட்டு எல் வி சந்திப்பகுதியில் இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
வேகக்கட்டுப்பாட்டினை இழந்த உழவு இயந்திரம் மின் கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது காயமடைந்த சாரதி மக்களால் மீட்கப்பட்டு ஒட்டுசுட்டான் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைபெற்று சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
Tags:
sri lanka news