விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், நகைகள் புதைக்கப்பட்டுள்ளனவா? - இருபாலையில் அகழ்வுப் பணி ஆரம்பம்..!!!


இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் கோப்பாய் பொலிஸாரின் ஏற்பாட்டில் இந்த அகழ்வுப் பணி இன்று முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது .

இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தங்க நகைகள் புதைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து 6 பேர் அகழ்வுப் பணிக்கு தயாராகிய நிலையில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் இராணுவத்தில் உள்ளவர்களும் அடங்கியிருந்தனர் .

இந்த நிலையில் கோப்பாய் பொலிஸாரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் அனுமதியுடன் இன்று முற்பகல் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here