வெந்து தணிந்தது காடு படம் வெளியாவதில் இருந்த சிக்கல் நீங்கியது..!!!




நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

நாளை முதல் இப்படம் பெரியளவில் வெளியாக இருக்கிறது, இப்படத்தை சிம்பு ரசிகர்கள் ஒட்டுமொத்த தமிழ் திரையுலக ரசிகர்களும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இப்படம் வெளியாவதில் இருந்த சிக்கல் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.அதன்படி சூப்பர்ஸ்டார் என்ற பெயரில் படம் இயக்க முன்பணம் பெற்ற கவுதம் மேனன் அதே கதையை வெந்து தணிந்தது காடு என படமாக எடுத்துள்ளதாக ஆன் இன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்குநர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

இதனிடையே தற்போது இயக்குநர் கவுதம் சமரசம் பேச்சப்பட்டு வாங்கிய ரூ. 2.40 கோடி முன்பணத்தை அடுத்த படம் இயக்கும் முன் வழங்கி விடுவதாக கவுதம் மேனன் உத்தரவாதம் அளிக்கப்பட்டு இருக்கிறதாம்.
Previous Post Next Post


Put your ad code here