தியாக தீபத்தின் நினைவேந்தல் ஆரம்பம்..!!!(Video)


ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.

யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரம் காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.

மாவீரர்களின் பெற்றோரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2). சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5). தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.


ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து திலீபன் உயிர்நீத்தார்.

























Previous Post Next Post


Put your ad code here