%20(1).webp)
மஹியங்கனை, மாபகட குளத்தில் குளிக்க சென்ற இரண்டு மருத்துவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹியங்கனை மற்றும் கரவனெல்ல மருத்துவமனைகளில் சேவையாற்றி வரும் இந்த மருத்துவர்கள் நேற்று குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர்.குளத்தில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய மருத்துவரை காப்பற்றி மஹியங்கனை மருத்துமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது அவர் உயிரிழந்துள்ளார்.
கரவனெல்ல மருத்துவமனையில் சேவையாற்றி வந்த 31 வயதான கம்பஹா திவுலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மருத்துவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் கூறியுள்ளனர்.
Tags:
sri lanka news