இயக்குனர் ராம் - நிவின் பாலி இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு எப்போது?... வெளியான தகவல்..!!!




இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

இந்த படத்தில் விலங்குகள் அதிகளவில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. படம் முழுவதும் விலங்குகள் ஒரு கதாபாத்திரம் போலவே வரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில் வரும் அக்டோபர் 11 ஆம் தேதி இயக்குனர் ராம் மற்றும் நடிகர் நிவின் பாலி ஆகிய இருவரின் பிறந்தநாளின் போது படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் ஆகியவற்றை ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்துக்கு ‘ஏழு மலை ஏழு கடல் தாண்டி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here