யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தீபாவளித் திருநாளான இன்று திங்கட்கிழமை(24.10.2022) முற்பகல்-10.15 மணி முதல் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
கடும் மழை காரணமாக குறித்த காலப் பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. இதன்பின்னரும் மப்பும் மந்தாரமுமான காலநிலை நீடித்தமையைக் காண முடிந்தது.
கடும் மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் பலவற்றிலும், வீதிகள் பலவற்றிலும் அதிக மழைவெள்ளநீர் தேங்கி நின்றமையை அவதானிக்க முடிந்தது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்